'தினத்தந்தி'யின் கல்விப்பணியில் புதிய அங்கமாக வெளிவருகிறது இந்த அரசுவேலைக்கான 'போட்டித்தேர்வு மாதிரி வினா-விடை இணையதளம்'. அரசுவேலை கனவை நனவாக்க உழைத்துவரும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), குரூப் 4 பதவிகள், குரூப் 2 பதவிகள், காவலர் பதவிகள் (TNUSRB), எஸ்.எஸ்.சி. (SSC) பதவிகள் ஆகியவற்றுக்கு நடத்தப்படும் தேர்வுகள் அடிப்படையில் இந்த மாதிரி வினா-விடை தேர்வுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மாணவ-மாணவிகள் இந்த இணையதளத்தில் தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்து கொண்டு பயன்படுத்தலாம். தேர்வு எழுதி முடித்ததும் உடனடியாக முடிவுகள் அறிந்து கொள்ளும் வசதியும் உள்ளது. மேலும் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதிப்பழகலாம்.